தன் மகன் வேத் நிச்சயமாக திரையுலகில் பணியாற்றுவார் என்று கூறியுள்ளார் ரஜினி மகள் சவுந்தர்யா.
எனினும், அது எப்போது நடக்கும் என்பதை இப்போதே கூற இயலாது என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“இதற்கு முன்பு ‘கோவா’ படத்தை நான் தயாரித்தேன். அந்தப் படம் உருவாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.
“அதன் பிறகு பல்வேறு காரணங்களால் படத்தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை. இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டேன். இனி அதில் எந்த இடையூறும் இருக்காது. திரையுலகில் தயாரிப்பாளராக எனது பணி தொடரும்,” என்று சவுந்தர்யா கூறியுள்ளார்.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சிபி சக்கரவர்த்திக்கு நிறைய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து வெற்றிப் படத்தைத் தருவார் என உறுதியாக நம்பலாம் என்றும் சவுந்தர்யா மேலும் தெரிவித்துள்ளார்.

