நடனத்திலும் இசையிலும் தமக்கு ஆர்வம் அதிகம் என்று கூறுகிறார் நடிகை வேதிகா.
அண்மைய பேட்டியில் தனது இரண்டு காதல்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
“எனது வாழ்க்கையில் இரண்டு காதல்கள் உண்டு. ஒன்று என் தாய் மீதான முதல் காதல், முத்தான காதல்.
“நடனம் மீது ஏற்பட்டது இரண்டாவது காதல். சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும், நடனம் ஆடத் தொடங்கிவிடுவேன்.
“இந்த இரண்டு காதல்களும் என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்,” என்று வேதிகா கூறியுள்ளார்.
‘பரதேசி’, ‘காவியத் தலைவன்’, ‘காஞ்சனா-3’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிப்பில் மட்டுமல்லாமல், நடனத்திலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள வேதிகா, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

