நடிகை மேகா ஆகாஷ், தன் நீண்ட நாள் காதலரைக் கைப்பிடிக்கவுள்ளார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வரும் மேகா ஆகாஷ், தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதற்கான நிச்சயதார்த்த விழா கேரளத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
தற்போது ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எனது ஆசை நிறைவேறிவிட்டது. முடிவிலா காதலும் மகிழ்ச்சியும் என் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காதலுடன் வாழ இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம்,” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.