‘கூலி’ படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை நடிகர் நாகார்ஜுனா வாங்கியுள்ளார்.
அந்தப் படத்தில் அவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘கூலி’ படத்துக்காக அவர் ஊதியம் வேண்டாம் என்று தொடக்கத்திலேயே கூறிவிட்டார். அதற்குப் பதிலாக, திரையரங்க உரிமையை ரூ.43 கோடிக்கு வாங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிறது ‘கூலி’.
இதற்கிடையே, தனுஷுடன் நாகார்ஜுனா இணைந்து நடித்த ‘குபேரா’ படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது, நாகார்ஜுனாவுக்கு மேலும் ஒரு திருப்புமுனைப் படமாக அமையும் என்றும் அவரது நடிப்பு அருமை என்றும் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும், தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழிலும்கூட அவருக்கு சவால்தரும் கதாபாத்திரங்களுடன் கூடிய வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.