ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்-2’ படம்.
இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இதில் நாகார்ஜுனாவை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.
அவர் ஏற்கெனவே, ரஜினியுடன் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் தனுஷின் ‘குபேரா’வில் நடித்திருக்கும் அவர், இப்போது தன் மகன் அகிலை வைத்து தெலுங்கில் ‘லெனின்’ என்ற அதிரடி சண்டைகள் நிறைந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதனிடையே, நாகார்ஜுனாவின் நூறாவது படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது அவர் நடித்த படங்களிலேயே அதிக செலவில் தயாராகும் படமாக இருக்குமாம்.
நட்புக்கு மரியாதை தரும் விதமாக அவரது நூறாவது படத்தில் சிரஞ்சீவி, மோகன்பாபு தாமாக முன்வந்து கௌரவ வேடங்களில் நடிக்க உள்ளனர்.