நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முயற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் ‘டார்க் ஹெவன்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார் நகுல்.
பாலாஜி என்பவரின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஏதேனும் பிரச்சினை எழுந்தவண்ணம் இருந்தனவாம்.
எனினும், ஏறக்குறைய 70 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத இயக்குநர், நகுலை படத்திலிருந்தே நீக்கிவிட்டாராம்.
நகுலுக்குப் பதிலாக சின்னத்திரை பிரபலம் நடிகர் சிந்துவை ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தயாரிப்பு தரப்புக்கு சில கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

