மாநிறம்தான் நமது ஊர் நிறம், அதுதான் அழகு என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ரசிகர்களின் கேள்விக்குக் கலகலப்பாக பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், க/பெ.ரணசிங்கம்’ உண்மை கதை என்பதால் அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வடசென்னை, காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் நடித்த அனுபவம், தமக்குப் பிடித்த பாடல்கள், வசனம் உள்ளிட்டவைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நம்ம ஊரு கலர் மாநிறம்தான், அதுதான் அழகு, களையானதும்கூட,” என்றார்.
பின்னர் குழந்தைகளுடன் ‘எங்க அண்ணன்’ பாடலுக்கு நடனமாடிய ஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தில் வரும் ‘ஆசை பட்டா மட்டும் போதாது அடம் பிடிக்கணும், அதுக்கு அனைவரும் அடம் பிடிக்க கத்துக்கணும்’ என்ற வசனத்தையும் பேசிக்காட்டினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருவதாகக் கூறினார்.