ரஜினியுடன் மோதும் நானி

ரஜினியுடன் மோதும் நானி

1 mins read
ace20a1d-b5d7-4e62-8af9-4e021f7e9909
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. - படம்: சமயம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையமைத்து தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படம் மார்ச் 26க்குப் பதில், ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அறிமுகப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால் திரையரங்குகளில் ரஜினி - நானி இடையே நேரடிப் போட்டி நிலவக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாரஜினிகாந்த்