பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, மணமகள் அக்ஷயாவும் தனுஷும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் வெளியானது.
இத்திருமணத்தில் நடிகர் சரத்குமார், கார்த்தி, பாண்டியராஜன், விதார்த், நடிகைகள் ராதிகா, குஷ்பு, மீனா, கலா மாஸ்டர், யூடியூபர் இர்ஃபான், ஜப்பான் நாட்டுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.