விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் நாயகன் நரேன்.
தமிழில் பல நல்ல படங்களில் நடித்திருந்தாலும், இவரால் தொடர்ந்து நாயகனுக்குரிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
மலையாளத்தில் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் இவர், கடைசியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கிறாராம் நரேன். சில நிமிடங்களே திரையில் வந்துபோனாலும், அப்படத்தின் கதைக்கு இவரது கதாபாத்திரம்தான் திருப்புமுனையாக அமைந்திருக்குமாம்.
தற்போது ‘சாகசம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார் நரேன். அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.