நடிகர்களை விமர்சித்த நாசர்

நடிகர்களை விமர்சித்த நாசர்

1 mins read
6f3c02c5-9d90-4911-b5d3-9bf5f9cbb29b
நாசர். - படம்: மாலை மலர்

சற்றுப் பிரபலமாகிவிட்டாலே இன்றுள்ள நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார் மூத்த நடிகர் நாசர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் உரிய விளக்கம் தெரியாதவர்கள் கட்சி தொடங்குவதாக விமர்சித்தார்.

“எல்லாருக்கும் தெரியும். நான் பொதுவான ஆள். எந்தக் கட்சியையும் சாராதவன். மக்களின் சார்பாக நான் பேசுகிறேன்.

“திட்டங்கள் கொள்கைகள் ஆகமாட்டா. எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் அரசை நடத்தப் போகிறீர்கள் என்ற ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

“திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வது மட்டும் கட்சியின் வேலையன்று. எல்லோருக்கும் வீடு கட்டித் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கலாம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா என்று பார்க்க வேண்டும்,” என்றார் நாசர்.

குறிப்புச் சொற்கள்