‘கங்குவா’ திரைப்படம் மிகத் தரமான படைப்பு என்கிறார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களால் நிச்சயம் பேசப்படும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் நட்ராஜ் கொடுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“ஒருதரப்பினர் இந்தப் படம் குறித்து தேவையின்றி விமர்சித்து வருகின்றனர். அனைவரும் இதன் இரண்டாம் பாகத்தை நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.
“அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடித்துப்போகும். அப்போதுதான் முதல் பாகத்தின் அருமை தெரியவரும்,” என்கிறார் நட்ராஜ்.
ரூ.300 கோடி செலவில் உருவான ‘கங்குவா’ படம், ரூ.110 கோடி மட்டுமே வசூல் கண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும், ஓடிடி தளத்தில் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.