இயக்குநர் சுந்தர்.சி, அடுத்து சொந்தமாக மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றுள் ஒரு படத்தை அவரது இளைய மகள் இயக்க உள்ளதாகவும் மற்றொரு படத்தில் மூத்த மகள் அனந்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்றும் தகவல். இதன் மூலம் மொத்தக் குடும்பமும் திரையுலகில் கால் பதித்துவிட்டது.
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா நுணுக்கங்களைக் கற்றுவந்தார் அவந்திகா.
குறுகிய காலத்திலேயே அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டதாக நம்பிக்கை ஏற்பட்டதும், பயிற்சி போதும் என முடிவெடுத்துவிட்டாராம்.
என்னதான் அரசியல் நடவடிக்கைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தாலும், மகள்களுக்காக எந்த நேரத்திலும் படப்பிடிப்பு தளத்தில் காத்திருப்பேன் என்று கணவரிடம் உறுதியாக கூறியுள்ளாராம் குஷ்பு. அவரது இந்த வார்த்தைகளை நம்பித்தான் களமிறங்குகிறார் சுந்தர்.சி.