தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அந்நாட்டின் பல பகுதிகளுக்கு தங்கள் மகன்களுடன் சென்றபோது எடுத்த புகைப்படங்கள், காணொளிகளை அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இவற்றை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு ஒருமுறை தன் மகன்களின் குறும்புகளைப் படம்பிடித்து அந்தக் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்.
பிறந்ததிலிருந்து அவர்களின் சிறு அசைவுகள் முதற்கொண்டு படமாக்குகிறார்.
மேலும், தேர்ந்த ஒளிப்பதிவாளரைப் போல் தன் குழந்தைகளை அழகான பல்வேறு விளக்கொளிகள், இயற்கை சூழலில் வைத்தும் புகைப்படங்கள் எடுக்கிறாராம். வளர்ந்த பிறகு அவர்களுக்கு அதைக்காட்டி மகிழ்ச்சிப்படுத்த எண்ணமாம்.