தனுஷுடன் மோதல் தொடங்கியது முதல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நயன்தாரா, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளாராம்.
அவரது 40வது பிறந்தநாள் அன்று அவரது திருமண ஆவணப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. வழக்கமாக தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவது நயன்தாராவின் வழக்கம். இம்முறை தனது மகன்கள், கணவருடன் அண்மையில் புதுடெல்லி சென்றிருந்தார்.
அங்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் ஒரு சிறிய உணவகத்துக்குச் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு சாதாரண உணவு வகைகளைச் சாப்பிட்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை எளிமையாக முடித்துக் கொண்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் நயன்தாராவின் பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.