‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி. இயக்குகிறார்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்தப் படத்தில் மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
இதற்காக கடந்த ஒரு மாதமாக அவர் விரதம் கடைப்பிடித்து வருவதாக படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பூசை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. நூறு கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தில் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர்.
வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், சம்பளப் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

