தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டில் குடிபுகுந்தார் நயன்தாரா

2 mins read
e8af781c-b9c9-4c66-97c5-8df4a8732f31
ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டில் தன் கணவர் விக்னேஷுடன் நயன்தாரா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடும்பத்துடன் குடிபுகுந்துள்ளார் முன்னணி நடிகை நயன்தாரா.

திருமணத்திற்குப் பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்-2’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பைவிடவும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நயன்தாராவுக்கு போயஸ் தோட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்பது பல ஆண்டுக் கனவு. அந்தக் கனவு ஒரு வழியாக இப்போது நிறைவேறி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்குமுன் பெருந்தொகை கொடுத்து போயஸ் தோட்டத்தில் வாங்கிய வீட்டை நயன்தாரா இடித்துவிட்டு தமது விருப்பப்படி அங்குலம் அங்குலமாக அழகாக வடிவமைத்து ரசித்துக் கட்டி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 7,000 சதுர அடியில் ஏறத்தாழ ரூ.100 கோடி செலவில் மூன்று தளங்களுடன் கலைநயத்தோடு ஸ்டூடியோ போன்று வீட்டை உருவாக்கி இருக்கிறார்.

வீட்டின் புகைப்படங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.

சினிமாவை மிஞ்சும் வகையில் பழங்காலப் பொருள்கள், தோட்டம், அருங்காட்சியகம் போன்று பழங்காலத் தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்போடு வீட்டை உருவாக்கி இருக்கின்றனர்.

முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்குத் தனி அறை என கண்கவர் கனவு இல்லமாகக் கட்டி இருக்கிறார் நயன்தாரா.

ரஜினிகாந்த், தனுஷ் போன்றோர் அந்தப் பகுதியில்தான் வசிக்கிறார்கள். இந்நிலையில் தான் கட்டியிருக்கும் வீட்டுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள், ‘நயனும் போயஸ்வாசியா ஆகிட்டாங்களே’ என்று பதிவிட்டு படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நயன்தாரா, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ பட விழாவில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநயன்தாரா