தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றாலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று ஓய்வெடுக்க தவறுவதில்லை.
இம்முறை ஆங்கிலப் புத்தாண்டை துபாயில் கணவர், இரு குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.
நடிகர் மாதவன் தற்போது துபாயில் வசித்து வருகிறார். அவர்தான் நயன், விக்கி தம்பதியரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு துபாய்க்கு வருமாறு அழைப்பு விடுத்தாராம்.
மாதவன், அவரது மனைவி சரிதா பிர்ஜே, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் ஒன்றாக உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நயன்தாரா, ‘எங்களைச் சுற்றி அன்பு மட்டுமே உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.