வழக்கமாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார் இயக்குநர் விக்னேஷ். கடந்த சில நாள்களாக அவர் தரப்பிலிருந்து அதிக பதிவுகளைக் காணவில்லை.
வேறொன்றுமில்லை... தனது இயக்கத்தில் உருவாகி வரும் ‘எல்ஐகே’ படத்துக்கான பணிகளில் மூழ்கி உள்ளார் விக்னேஷ்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், கணினி சார்ந்த தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் பின்னணி இசை, குரல் பதிவு தொடங்கும் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர்.
படத்தின் விளம்பர நிகழ்வுகள், இசை வெளியீட்டு விழாவை பெரிய பட்ஜெட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார் விக்னேஷ். அவர் மனைவி நயன்தாரா வழக்கமாக தனது படங்கள் மட்டுமல்லாமல், வேறு படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.
எனினும், கணவருக்காக அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுத்து ‘எல்ஐகே’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
“இதனிடையே, அவர் அவ்வாறு முடிவெடுக்கும் பட்சத்தில் கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழக்கூடும். காரணம், நயன்தாராவின் இக்கொள்கையால் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கடந்த காலங்களில் பலவிதமாகப் புலம்ப நேரிட்டது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.