மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘பாஸ்கர் தி ராஸ்கல்’, ‘புதிய நியமம்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. மம்மூட்டி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி உட்பட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது நயன்தாராவும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். கேரளாவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளதாகத் தகவல்.
இந்தப் படத்தை ‘எம்எம்எம்என்’ எனத் தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ளனர்.

