நடிகை நஸ்ரியா மீண்டும் தமிழில் பெரிய படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
முதற்கட்டமாக, ஏஎல் விஜய் இயக்கும் தமிழ் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதையடுத்து, ஜித்து மாதவன் இயக்கத்தில் தமிழில் தயாராகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதனிடையே, நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம் நஸ்ரியா.
“நடிப்பு என்பது சவாலான அனுபவங்களைத் தரக்கூடியது. அதிலும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது கூடுதல் சவாலைத் தரக்கூடியது,” என்று பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் நஸ்ரியா.

