காலில் அடிபட்டதால் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஹைதராபாத்தில் தங்கியிருந்தபடி சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அனைவருக்கும் கருணை உள்ளம் என்பது தேவை என்றும் தற்போது கருணையை பலர் குறைவாக மதிப்பிட்டு வருகின்றனர் என்றும் தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் எனக்கான அனைத்தையும் கருணையுடனும் அதனுடன் இணைந்த மற்ற அம்சங்களுடனும் தேர்வு செய்கிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்க வேண்டும்,” என்று தமது பதிவில் மேலும் கூறியுள்ளார் ராஷ்மிகா.
அண்மையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரு காரில் ஏறிச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.
அதில், வேகமாகச்சென்று காரில் ஏறும் விஜய் தேவரகொண்டா, காலில் அடிபட்டதால் நொண்டியபடியே நடமாடும் ராஷ்மிகாவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
இதையடுத்து விஜய் தேவரகொண்டாவை பலரும் விமர்சித்துள்ளனர்.