ரஜினியின் படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்க இருக்கிறார் நெல்சன்.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.
இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்குவதற்குத் தயாராகி வருகிறார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ‘பான் இந்தியா’ படத்தை இயக்கப் போகிறார் நெல்சன்.
ஜூனியர் என்டிஆரிடம் கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்ட அவர், அப்படத்திற்கான மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.