மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் மாயமான சம்பவம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் மூன்று பாக விளக்கப்படத்தை வெளியிடவுள்ளது.
"MH370: The Plane That Disappeared" எனும் படம் மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்படும். விமானம் மாயமாக மறைந்து அன்றோடு ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும்.
எந்தவொரு தடயமும் இல்லாமல் விமானம் எப்படி மறைந்தது என்பதை படம் விளக்கும். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளுடன், விமானத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்ற பாவனை காட்சிகளும் இடம்பெறும்.
சம்பவத்தில் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளித்ததாக பட இயக்குநர் குறிப்பிட்டார்.
MH370 விமானம் 8 மார்ச், 2014ஆம் ஆண்டு மாயமாக மறைந்தது. கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு விமானம் பறந்துகொண்டிருந்தபோது அது மறைந்தது. அதில் 227 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.