தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித்குமார். தற்போது அவர் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது சொந்த கார் பந்தய அணியான, ‘அஜித்குமார் ரேஸிங்’ மூலம் பல்வேறு பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார் அவர்.
அஜித்தின் இந்த கார் பந்தய வாழ்க்கை தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.
இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் குளிர் பானமான ‘கேம்பா எனர்ஜி’ (Campa Energy), அஜித் குமார் அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதையடுத்து, ‘கேம்பா எனர்ஜி’ விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் விளம்பர உலகில் கால் பதித்தார்.
இந்நிலையில், அஜித் நடித்துள்ள கேம்பா எனர்ஜி விளம்பரம் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது.
கார் பந்தயப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள அந்த விளம்பரம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அஜித் ரசிகர்களே அந்த விளம்பரத்தை வசைபாடுவதாகக் கூறப்படுகிறது.

