தென்னிந்தியப் படங்களில் திரிஷா பரபரப்பாக நடித்து வருகிறார்.
2025ஆம் ஆண்டில் அவரது பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
தமிழில் தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’, கமலின் ‘தக் லைஃப்’, சூர்யாவின் ‘சூர்யா 45’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷா அவரது சமூக ஊடகங்களில் இணையவாசிகளை கவரும் விதமாக தனது புதுப்புதுப் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
40 வயதைக் கடந்தாலும் திரிஷா இன்னும் இளமையாக தோற்றமளிப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

