சிவகார்த்திகேயன் நிறுவனம் தயாரிக்கும் புதுப் படம்

1 mins read
5b2a562e-6bba-4fd0-8093-27b266ec4f86
சிவகார்த்திகேயன். - படம்: இந்தியா டுடே

‘மதராஸி’ படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படமான ‘பராசக்தி’ வெளியாகிறது. இதையடுத்து சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் சொந்தப்படம் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளாராம்.

கடந்த 2015ஆம் ஆண்டு எஸ்கே புரொடெக்‌ஷன் நிறுவனம் சார்பாக ‘கனா’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார் சிவா.

அதன்பிறகு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டாண்’, ‘கொட்டுக்காளி’, ‘ஹவுஸ்மேட்’ உள்ளிட்ட படங்களை அவரது நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், அவர் புதுப்படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரது எஸ்கே புரொடக்‌ஷன் நிறுவனமே சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகுமாம்.

குறிப்புச் சொற்கள்