ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ், கார்த்தி

1 mins read
aa239020-8771-4caf-8800-f94d25d8b2c9
ஹெச்.வினோத். - படம்: பின்க்வில்லா

‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹெச் வினோத்.

இதையடுத்து, தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். மேலும், தனுஷுக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி, ஹெச்.வினோத். கூட்டணியில் உருவான ‘தீரன் அதிகாரம் ஒன்றே’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு முன்பே தனுஷ் படத்தை இயக்க இருந்தார் வினோத். விஜய் பட அறிவிப்பால் அது தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜனவரி மாத இறுதியில் அவர் தனுஷ் படத்துக்கான வேலைகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்