தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலிவுட்டில் உருவாகும் புது காதல் ஜோடி

2 mins read
d022f3db-7b98-4170-9082-44db44f1e7d2
நடிகர் சிம்பு, நடிகை சாய் பல்லவி. - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நாயகனாக வலம் வரும் சிம்பு, ‘தக் லைஃப்’, ராம்குமார் இயக்கும் படம், தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம், அஸ்வத் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

இதுதவிர ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. அது சிம்புவின் 50வது படமாக உருவாக உள்ளது. இது வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இதில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.

அதன்பின் சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அப்படம் முடிந்ததும் சிம்புவின் 51வது படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் அஸ்வத். இப்படத்திற்கு ‘காட் ஆஃப் லவ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

சிம்புவின் லைன் அப்பில் உள்ள மற்றுமொரு படம் ‘எஸ்.டி.ஆர் 49’. இப்படத்தை ராம்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கெனவே ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிம்பு கல்லூரி மாணவனாக நடிப்பதால், கண்டிப்பாக அவர்கள் இருவருக்கு இடையேயான காதல் காட்சிகள் நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது. இருவரும் அபாரமாக நடிப்பார்கள் என்பதால் கோலிவுட்டில் ஒரு புது காதல் ஜோடி உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் சந்தானமும் நகைச்சுவையில் கலக்க உள்ளாராம். ஏற்கெனவே சிம்பு - சந்தானம் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்