தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீலீலா ‘பராசக்தி’ படம் மூலம் தமிழிலும் வெற்றி வலம்வர திட்டமிட்டுள்ளார்.
இவருக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. ஏற்கெனவே இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். அண்மையில் மூன்றாவது குழந்தையும் ஸ்ரீலீலா குடும்பத்தில் இணைந்துள்ளது.
இன்ஸ்டகிராமில் அந்தக் குழந்தையின் புகைப்படத்துடன், ‘எங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் புதிய உறுப்பினரால் இதயம் மகிழ்ச்சியில் மின்னுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீலீலாவின் நல்லுள்ளத்தை இணைய வெளியில் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த உற்சாகத்துடன் தற்போது தமிழ் மொழியைக் கற்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம்.
‘பராசக்தி’ போன்ற பெரிய படங்களில் இணையும்போது மொழியைப் புரிந்துகொண்டு நடித்தால்தான் படம் வெற்றிபெறும் என்றும் அதில் தமது பங்களிப்பு குறித்தும் பேசப்படும் என்றும் கூறுகிறார்.