திரிஷா திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த மைல்கல்லை அவர் தற்போது நடித்து வரும் படத்தின் குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
சூர்யாவின் 45வது படப்பூசை கோவையில் உள்ள ஆணை மலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்னர் அங்கேயே படப்பிடிப்பையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திரிஷா திரையுலகில் அடியெடுத்து வைத்து 22 ஆண்டுகள் ஆனதை அறிந்த இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் நாயகன் சூர்யாவும் திரிஷாவுக்குத் தெரியாமல் சிறிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்ததும் திடீரென பெரிய கேக் ஒன்றை திரிஷா முன்பு வைத்தபோது அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லையாம். முகம் நிறைந்த புன்னகையுடன் அவர் அந்த கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.