‘ஏழு கடல் ஏழு மலை’​யில் புதிய உலகம்

‘ஏழு கடல் ஏழு மலை’​யில் புதிய உலகம்

1 mins read
926a8da0-0c5a-44d8-b461-4a72ae0afbc7
‘ஏழு கடல் ஏழு மலை’ படக்காட்சி. - படம்: இந்து தமிழ் திசை

நடிகர் நிவின் பாலி, நடிகர் சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இயக்குநர் ராம் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்குப் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது.

தற்போது இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“இந்தப் படத்தில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும் பேசப்படும். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சூரியும் சிறப்பாக நடித்துள்ளார்,” என்று படக்குழுவினர் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், “இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களை நிச்சயமாகப் புது உலகத்துக்கு அழைத்துச் செல்வார்,” எனக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்