திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில், பிரேம் குமார் இயக்கிய ‘96’ படம், 2018ஆம் ஆண்டு ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அதிலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவெடுத்திருப்பதாகவும் விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இவை பொய்யான தகவல்கள் என்று படத்தின் இயக்குநர் மறுத்ததாக ‘மூவி வோர்ல்டு தமிழ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
படத்தின் கதைப்படி வயதான தோற்றத்தில் நடிக்க விருப்பமின்றி விஜய் சேதுபதி விலகுவதாகச் சொல்லப்படுகிறது. நற்பெயரை ஈட்டித் தந்த படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அவர் விலக வாய்ப்பில்லை என்கின்றனர் ரசிகர்கள். வெளியான தகவல் உண்மையா பொய்யா என்று இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

