‘பூ’ படத்தின் இயக்குநர் சசி, அடுத்து நடிகர் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
ஆனால், படப்படிப்பு தொடங்க அதிக காலம் எடுப்பதால் அதற்குள் தனக்காக ஒரு படத்தை இயக்க வேண்டும் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டாராம்.
முதலில் யோசித்த இயக்குநர் சசி, பின்னர் விஜய் ஆண்டனியின் அன்பு வேண்டுகோளைத் தட்டிக்கழிக்க முடியாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.
இயக்குநர் சசி, விஜய் ஆண்டனி இருவரும் ஏற்கெனவே ‘பிச்சைக்காரன்’ வெற்றிப்படத்தைத் தந்தவர்கள் என்பதால், இந்த இரு ‘சசி’க்களின் கூட்டணி கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

