அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் ‘அமரன்’ திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகளில் அப்படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளத் தலைநகர் கொச்சியில் நடந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் இடத்துக்கு நான் வருவதாக சொல்வது தவறு. யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்கமுடியாது. இவ்வளவு பெரிய இடத்தை விட்டுவிட்டு அவர் அரசியலுக்குச் செல்கிறார் என்றால் அவரது இலக்கு வேறு. அவர் வேறு துறைக்குச் சென்றாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்பமுடியாது,” எனக் கூறினார்.
மேலும், “தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்ற தகவல் பரவுகிறது. இதுவரை அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை,” என்றார் சிவா.

