அடுத்த மாதம் திரைகாணும் ‘கான் சிட்டி’

அடுத்த மாதம் திரைகாணும் ‘கான் சிட்டி’

1 mins read
535e2f17-a07a-4810-adf7-0ce8c8137772
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். - படம்: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் ‘டீசர்’ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினரும் அதை உறுதிசெய்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரணக் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மின்னிலக்க உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதனும், படத் தொகுப்பாளராக அருள் மோசசும் பணியாற்றியுள்ளனர்.

படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்தியோகி பாபு