‘பூ’ படத்தின் இயக்குநர் சசி, அடுத்து நடிகர் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்க அதிக காலம் எடுப்பதால் அதற்குள் தனக்காக ஒரு படத்தை இயக்க வேண்டும் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டாராம்.
முதலில் யோசித்த இயக்குநர் சசி, பின்னர் விஜய் ஆண்டனியின் அன்பு வேண்டுகோளைத் தட்டிக்கழிக்க முடியாமல் ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் ஏற்கெனவே ‘பிச்சைக்காரன்’ வெற்றிப்படத்தைத் தந்தவர்கள்.
விஜய் ஆண்டனி படத்தை முடித்த கையோடு, நடிகர் சசிகுமாருடன் இணைய உள்ளார் இயக்குநர் சசி. அண்மையில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘ஃப்ரீடம்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இரு ‘சசி’க்களின் கூட்டணி கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

