2025ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.
சூர்யா நடித்திருக்கும் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியிடுவதற்குத் திட்டமிட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.
அந்த வகையில் சூர்யாவின் ‘கங்குவா’ இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் அதையடுத்து நான்கு மாத இடைவெளியில் சூர்யாவின் 44வது படம் வெளியாக உள்ளது.
அத்துடன் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படமும் அடுத்த ஆண்டில் வெளியாகிறது.
இந்தப் படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கும் படங்களிலும் ‘வாடிவாசல்’ படத்திலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.