‘மகாராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் இது.
நல்ல கதையம்சத்துடன் உருவான படம் என்று ‘மகாராஜா’வைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருந்தனர்.
ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கண்ட இப்படம், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு கண்டது. அப்போதே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்தன.
அதற்கேற்ப, விஜய் சேதுபதியும் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் நித்திலனிடம் கேட்டுள்ளார்.
இருவரும் ‘மகாராஜா’ படத்தின் வெற்றியை அடுத்து அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது ‘மகாராஜா-2’ படத்துக்கான திரைக்கதை அமைப்பது குறித்து இருவரும் பேசினார்களாம்.
பயணம் முடிந்து ஊர் திரும்பிய பிறகு இது குறித்து சேதுபதியிடம் நித்திலன் எதுவும் கேட்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் திடீரெனத் தொடர்புகொண்டு பேசிய அவர், ‘மகாராஜா-2’ கதை, திரைக்கதை இரண்டையும் எழுதி முடித்துவிட்டதாகக் கூறியபோது சேதுபதி வியந்துபோனாராம்.
விஜய் சேதுபதி நாள்களை ஒதுக்கித் தந்தவுடன், படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் உடனடியாகப் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

