பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார். பின் ஏன் அவருடைய படத்திற்கு ‘வாரணாசி’ என்று பெயரிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கோபமாக பதிவிட்டு வருகிறார்கள்.
மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கும் புதிய படம் ‘வாரணாசி’. இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கி, வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) ஹைதராபாத்தில் படத்தின் பெயர், முன்னோட்டக்காட்சியை வெளியிட்டது.
அந்த நிகழ்வில் ராஜமௌலி, “இது எனக்கு ஓர் உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை.
“என் மனைவிக்கு அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் பேசுவார்.
“என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, நமக்குப் பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார்.
படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு அவர்மீதும் கோபம் வந்தது.
(‘வாரணாசி’ நிகழ்வின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு ராஜமௌலி இவ்வாறு பேசியது, சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.)
“என் சிறுவயதிலிருந்தே, ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு எவ்வளவு பிடிக்கும், அவற்றை உருவாக்குவது என் கனவுத் திட்டம் என்பதைப் பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை இவ்வளவு சீக்கிரம் படமாக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.
“ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, நான் மிதப்பதுபோல் உணர்ந்தேன். படம் வெளியானதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்,” என்றும் ராஜமௌலி தெரிவித்தார்.
‘கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று ஏன் தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்துகிறார்? இப்படி ஒரு மதிப்புமிக்க நபரிடமிருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை.
அவரின் இந்தப் பேச்சு மக்களின் இறை நம்பிக்கையை அழிப்பதாக இருக்கிறது, என்று வலைத்தளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

