திருமணத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
சிறு வயதில்கூட திருமணம் என்பது தமக்கு ஒரு கனவு போன்றே இருந்ததாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அப்போது குருவாயூர் கோவிலில் திருமணம் செய்வதை நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், நான் வளர்ந்த பிறகு என்னுடைய பார்வை மாறிவிட்டது. நீண்ட யோசனைக்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னைச் சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை.
“ஒருசிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று சொல்லும் ஐஸ்வர்யா லட்சுமிக்குத் தற்போது 34 வயதாகிறதாம்.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என இவரது தாயார் தொடர்ந்து வற்புறுத்துகிறாராம்.
“திருமணம் செய்துகொள்ள இணையத்தளத்தில் எனது பெயரைப் பதிவு செய்துள்ளேன். ஆனால், அதிலும் புகைப்படத்தைப் பார்த்து பலர் போலிக்கணக்கு என்று நினைத்துவிட்டனர்,” என்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.