தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலிச் சாமியாராக நடிப்பதில் தயக்கமில்லை: நட்ராஜ்

1 mins read
222f4ed1-2d82-4e98-b649-5217af598b4b
‘கம்பி கட்ன கதை’  படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘கம்பி கட்ன கதை’ என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் நட்ராஜ் (நட்டி).

எதிர்வரும் 17ஆம் தேதி திரைகாண உள்ள இப்படத்தில், நட்ராஜ் முதல் முறையாக சாமியார் வேடத்தில் நடித்துள்ளாராம். நடிகர் சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நட்ராஜ், “இப்படத்தின் இயக்குநர் ராஜநாதன் கதை சொல்லும்போதே நிறுத்தி நிதானமாகச் சொன்னார். எனக்கு அது பிடிக்கவில்லை.

“இரண்டாம் முறை அந்தக் கதையைக் கொஞ்சம் திருத்திக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“போலிச் சாமியாராக நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்ற மகிழ்ச்சிதான் அதிகம் உள்ளது,” என்றார் நட்ராஜ்.

குறிப்புச் சொற்கள்