ரசிகர் மன்றங்களில் விருப்பம் இல்லை: அரவிந்த்சாமி

ரசிகர் மன்றங்களில் விருப்பம் இல்லை: அரவிந்த்சாமி

1 mins read
35aea539-c765-4317-bcd1-23e4ee76394e
அரவிந்த்சாமி. - படம்: ஊடகம்

ரசிகர் மன்றங்களை அமைப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.

தற்போது நடிகர் கார்த்தியுடன் ’மெய்யழகன்’ என்ற படத்தில் நடித்து வரும் இவர், அண்மைய பேட்டியில் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி, தாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் ரசிகர்களை வைத்து மன்றம் தொடங்கினால் அவர்களுக்கு அதனால் என்ன பயன். ஒரு வேளை நான் திடீரென திரையுலகை விட்டு விலகினால் அவர்களது நிலை என்னவாகும்.

“என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என விரும்பினால் நிச்சயமாக ஊக்குவிக்க மாட்டேன். ரசிகர் மன்றங்களை வைத்து மற்றவர்களின் பிள்ளையைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை.

“என் மகனுக்கும் ஊரார் மகன்களுக்கும் என்னால் வெவ்வேறு அறிவுரைகளைக் கூற இயலாது,” என்கிறார் அரவிந்த்சாமி.

அவரது இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்