இயக்குநர் கஸ்தூரி ராஜா, ஒரு படவிழாவில் செல்வராகவன் குறித்துப் பேசியது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமானவர் கஸ்தூரி ராஜா. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரின் தந்தையாவார். இந்நிலையில், இவர் செல்வராகவன் குறித்து ஒரு படவிழாவில் பேசியபோது, “செல்வராகவனை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட பலரிடம் முயற்சி செய்தேன். ஆனால், எனது மகன் என்பதால் கூறி அவரை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. வாரிசுகள் கட்டாயமாக சினிமாவிற்கு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், தலையெழுத்து இருந்தால் வந்துதான் ஆகவேண்டும்,” என்றார்.