‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாவதற்கு யாரும் உதவவில்லை என இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படம் நீண்ட நாள்களாக வெளியீடு காணாமல் முடங்கியுள்ளது.
இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ வெளியாவதற்கான சூழல் உருவானது என்றும் இயக்குநர் லிங்குசாமியும் தயாரிப்பாளர் தாணுவும் மட்டுமே தமக்கு ஆறுதல் கூறியதாக கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படத்துக்கு ரசிகர்கள் இடையே நிலவும் எதிர்பார்ப்பும் அவர்கள் காட்டும் அன்பும் மட்டுமே என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
“ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் ‘ஓ அப்படியா’ என்று மட்டுமே பலரும் குறிப்பிடுவார்கள். இதற்கு மேல் திரையுலகில் எதிர்பார்க்க முடியாது,” என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.