தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனது தேசிய விருதை யாரும் கொண்டாடவில்லை: மாதவன்

1 mins read
b653451e-0395-447f-a585-234b9b60ab60
நடிகர் மாதவன். - படம்: ஊடகம்

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படம் ‘டெஸ்ட்’. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாதவன் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாகக் கொண்டாடவில்லை. தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்குச் சிறிது வருத்தம் அளித்தது. பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக்கொண்டேன்.

“என் மனத்தில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே எனது பதில்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்