‘மெய்யழகன்’ படத்தில் தமது நடிப்பை ஊடகங்கள் பாராட்டியதை தாம் பெருமையாகக் கருதுவதாக நடிகர் அரவிந்த்சாமி கூறியுள்ளார்.
“படத்தின் இயக்குநர் என்ன விரும்பினாரோ, அதை அப்படியே திரையில் வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் இயன்றவரை முயற்சி செய்தோம்.
“படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று மனதுக்குள் முடிவு செய்துகொண்டு செல்வேன். நான் எப்போதுமே உடன் நடிக்கும் மற்றவர்களைப் போட்டியாகக் கருதியதில்லை. காரணம் நான் எந்தப் போட்டியிலும் இடம்பெறவில்லை.
“செய்யும் வேலையை மனதார ரசித்துச் செய்யவேண்டும் என்பதும் ஓர் அழகான சூழலில் பணியாற்றவேண்டும் என்பதும்தான் எனது விருப்பம்,” என்கிறார் அரவிந்த்சாமி.

