தமிழ்த் திரையுலகில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால் வருத்தத்தில் உள்ளார் நடிகை தமன்னா.
இத்தனைக்கும் அவர் நடித்த ‘அரண்மனை-4’, அவர் நடனமாடிய ‘ஜெயிலர்’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், தமிழில் அவர் நாயகியாக நடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
தற்போது காதல்வயப்பட்டிருப்பதால் முன்னணி நாயகர்கள் தமன்னாவை ஒதுக்குகிறார்களாம். இளம் நாயகர்கள் வயது காரணமாக ஜோடி சேரத் தயங்குகிறார்களாம்.
“முன்பைவிட நான் அழகாக இருக்கிறேன், நன்றாக தமிழ் பேசுகிறேன், நன்றாக நடிக்கிறேன் என்றுதான் தமிழ் ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், வாய்ப்புகள்தான் கிடைப்பதில்லை. தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை,” என்றும் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் தமன்னா.