கணவர் மும்பையில் வசிக்க, நடிகை வரலட்சுமி சரத்குமாரோ தெலுங்கில் அதிகமான படங்களில் நடிப்பதால், ஹைதராபாத்தில்தான் அதிக நாள்கள் தங்குகிறாராம். நேரம் கிடைத்தால் மும்பை சென்று ஓரிரு நாள்கள் மட்டும் தங்குகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வரலட்சுமி கையில் கட்டு போட்டிருப்பது குறித்து பலரும் விசாரித்த வண்ணம் உள்ளனர். ஒருசிலரோ, வரலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் கணவர்தான் அவரைத் தாக்கிவிட்டார் என்றும் சமூக ஊடகங்களில் கிளப்பிவிட்டுள்ளனராம்.
“உண்மை என்னவென்றால் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் நடித்தேன். அப்போது எதிர்த்தரப்பு செய்த தவற்றால் எனக்கு அடிபட்டுவிட்டது,” என்று விளக்கம் அளித்துள்ளார் ‘வரூ’.
தற்போது தமிழில் விஜய் சேதுபதி மகனுடன் ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ‘சண்டக்கோழி-2’ பாணியில் வில்லத்தனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.
“மற்றபடி, நிஜ வாழ்க்கையில் எந்த சண்டை சச்சரவும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்கிறார் வரலட்சுமி.