தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்பு இல்லை என்றால் இன்று நான் இல்லை: சந்தானம்

1 mins read
53c8b91e-ac99-40d3-943f-3100fcf489af
விளம்பர நிகழ்ச்சியில் சந்தானம், சிம்பு. - படம்: ஊடகம்

சிம்பு இல்லை என்றால் இன்று நான் இந்த அளவிற்கு திரைத்துறையில் முன்னேறி இருக்க மாட்டேன் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் சந்தானம்.

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். இவர் தற்போது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அதில் நடிகர் சிம்பு, ஆர்யா கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் சந்தானம், “காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நானும் இருந்தேன். அப்போது என்னைப் பார்த்த சிம்பு ‘மன்மதன்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது எனக்கு முக்கியமான காட்சி ஒன்று வைக்க வேண்டும் என்றார். அப்போதுதான் திரையில் நல்ல கைத்தட்டல் கிடைக்கும் என்று கூறினார்.

அன்றுமுதல் இன்றுவரை எனக்கு கைத்தட்டல் கிடைக்க வேண்டும் என பல விஷயம் செய்துள்ளார். ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் பேசுவார். எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன்,” என சந்தானம் உருக்கத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசிம்பு